| சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளில் தாளங்கள் |
| கர்நாடக இசை மரபில் "சங்கீத மும்மூர்த்திகள்" என்று போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ சியாமா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆகியோர் இசை, இலக்கியம், பக்தி மற்றும் லய நுணுக்கங்களை ஒருங்கிணைத்து எண்ணற்ற கீர்த்தனைகளைப் படைத்துள்ளனர். இம்மூவரின் கீர்த்தனைகளில் தாளத்தின் அமைப்பும் பயன்பாடும் தனித்துவமான இடத்தைப் பெறுகின்றன. ஸ்ரீ தியாகராஜர் தமது கீர்த்தனைகளில் சர்வலகு நடை, பல்வேறு கிரகங்கள் (எடுப்புகள்), தேசாதி மற்றும் மத்யாதி தாள அமைப்புகளை திறம்படப் பயன்படுத்தியுள்ளார். சியாமா சாஸ்திரி மிஸ்ர சாப்பு, விலோம சாப்பு, த்விதாளக் கிருதிகள் மற்றும் சரபநந்தன தாளம் போன்ற அரிய லய வடிவங்களை கையாண்டு தமது தாளப் புலமையை வெளிப்படுத்தியுள்ளார். முத்துஸ்வாமி தீக்ஷிதர் சூளாதி சப்த தாளங்களை நவகிரகக் கீர்த்தனைகளில் பயன்படுத்தியதுடன், யதி அமைப்புகளையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இவ்வாய்வு, சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளில் காணப்படும் தாள அம்சங்களை பகுப்பாய்வு செய்து, அவர்களின் லயச் சிந்தனைகளின் தனித்துவத்தை எடுத்துரைக்கிறது. |
| Author: Mrs Shyamala Rangarajan
|
Submitted on : 31-May-2026
|
Arts : India/ Music/ Carnatic Classical Music |
| Journal ID : 0031-101-0344
|
|
|
| Views: 20/ Downloads :0 |
|
|
|
|
|